Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

$357 மில்லியனுக்கு ஒப்பந்தமாகவிருக்கும் காற்பந்து வீரர் நெய்மார்

ஐந்து வருட ஒப்பந்தத்தில் காற்பந்து வீரர் நெய்மார் கையெழுத்திட்டால் அவரது வாரச் சம்பளம் $886,000 ஆக இருக்கும்.

வாசிப்புநேரம் -
$357 மில்லியனுக்கு ஒப்பந்தமாகவிருக்கும் காற்பந்து வீரர் நெய்மார்

(படம்: AFP)

காற்பந்தாட்டப் பிரபலம் நெய்மார், பார்சலோனா அணியிலிருந்து பாரிஸ் செயிண்ட் ஜெர்மேய்ன் அணிக்கு மாறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

சுமார் $357 மில்லியனுக்கு அவர் செயிண்ட் ஜெர்மேய்ன் அணியுடன் ஒப்பந்தம் செய்யவிருப்பதாக நெய்மாரின் பேச்சாளர் கூறினார்.
இதற்கு முன் எந்த விளையாட்டாளரும் அவ்வளவு தொகைக்கு ஒப்பந்தாமானது இல்லை.

நெய்மார் பார்சலோனா அணியை விட்டுச் செல்வது காற்பந்து ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து வருட ஒப்பந்தத்தில் நெய்மார் கையெழுத்திட்டால் அவரது வாரச் சம்பளம் $886,000 ஆக இருக்கும்.

25-வயது நெய்மார் தற்போது பார்சலோனாவில் பெறும் தொகையைப் போல் அது மும்மடங்கு.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்