Back Home

எங்களைப் பற்றி

செய்தி – சிங்கப்பூர் மீடியாகார்ப் நிறுவனம் தமிழில் ஒலி, ஒளிபரப்பும் செய்தி, நடப்பு விவகார நிகழ்ச்சிகளின் மின்னியல் வடிவமாகும். கணினிகளிலும் கையடக்க மின்னியல் கருவிகளிலும் உடனுக்குடன் செய்திகளையும், சுவையான தகவல்களையும் உங்களுக்குக் கொண்டு வரும் உங்களின் துணைவன் இது. எங்களின் தொலைக்காட்சி, வானொலி, மின்னியல் செய்தியாளர்கள் இந்தப் புதிய இணையத்தளத்திற்குப் பக்கபலமாக இருப்பர்.

எங்களின் தொலைக்காட்சி செய்தி, உலகிலேயே ஆக அதிக காலம், கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. வசந்தம் ஒளிவழியில் நாள்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி செய்தியுடன், ஒலி 96.8 வானொலியில் தினமும் பல்வேறு நேரங்களில் இடம்பெறும் பல்வேறு செய்திகளையும் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தெரிந்துகொள்ளலாம். செய்திகளுடன் இணைக்கப்படும் புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவை எங்களின் சிறப்பம்சங்கள்.

எங்கள் நடப்பு விவகார நிகழ்ச்சிகளான “எதிரொலி”, “புதிய அரங்கம்” ஆகியவற்றையும் “திரைகடலோடி”, “செய்தியில் நாம்”போன்ற பல்வேறு விளக்கப்படத் தொடர்களையும் நீங்கள் மீண்டும் மீண்டும் காண முடியும். அத்துடன் நிதித்துறை,விளையாட்டு, சினிமா போன்ற பொழுதுபோக்கு அம்சங்ககளும் நிறைய உண்டு.

உங்களைச் சுற்றி நடப்பனவற்றை எங்களுக்கு படங்களுடன் தெரிவித்து நீங்களும் செய்தியாளர் ஆகலாம். மொத்தத்தில் செய்தி மூலம் சமூகத்தை இணைக்கும் இணையத்தளம் இது.

Top