Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மார்: ரக்கைன் மாநிலத்திற்கு உதவியை நிறுத்தும் நிவாரணக் குழு

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்திற்கு வழங்கி வரும் உதவியை உலக உணவுத் திட்ட (World Food Programme) நிவாரணக் குழு நிறுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
மியன்மார்: ரக்கைன் மாநிலத்திற்கு உதவியை நிறுத்தும் நிவாரணக் குழு

(படம்: Reuters)

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்திற்கு வழங்கி வரும் உதவியை உலக உணவுத் திட்ட (World Food Programme) நிவாரணக் குழு நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் ரக்கைன் மாநிலத்தில் மோசமடைந்து வரும் வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுவிட்டனர். சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம்களும், பௌத்தர்களும் ரக்கைனிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

நிவாரணக் குழுக்களின் உதவிப் பொருட்கள் பெரும்பாலும் கிளர்ச்சியாளர்களிடம் சென்று சேர்வதாக மியன்மார் அரசாங்கம் குறைகூறிவருகிறது.

சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம்கள் சுமார் 120,000பேர் 2012இலிருந்து நிவாரண முகாம்களில் வழங்கப்படும் உணவு, அத்தியாவசிய பொருட்களை நம்பியிருக்கின்றனர்.

அதிகரித்து வரும் வன்முறையால் இதுவரை ரோஹிங்யா முஸ்லிம்கள் 40,000 பேர் பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ளனர். பல்லாயிரக் கணக்கானோரைப் பங்களாதேஷ் திரும்பி அனுப்பியுள்ளது. மியன்மாரிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் இதுவரை பலர் மாண்டு விட்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்