Images
  • india babies
    படம்: AFP

உத்தரப் பிரதேசத்தில் ஒரே மாதத்தில் 49 குழந்தைகள் பலி

இந்தியாவின் வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஓர் அரசு மருத்துவமனையில், ஒரே மாதத்தில் 49 குழந்தைகள் மாண்டன.

அங்கு இரண்டு நாட்களில் மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மாண்டன. ஜூலை 21ஆம் தேதிக்கும், ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தக் குழந்தைகள் மாண்டதாகக் கூறப்படுகிறது. 

அதே காலகட்டத்தில் உத்தரப் பிரதேசத்திலுள்ள மற்றோர் அரசாங்க மருத்துவமனையில் 64 குழந்தைகள் மாண்டன.

மருந்து மற்றும் உயிர்வாயுப் பற்றாக்குறையே குழந்தைகளின் மரணத்துக்குக் காரணம் என்று பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர் கூறுகின்றனர். அதை மறுத்துவரும் மருத்துவமனை அதிகாரிகள், 19 குழந்தைகள் இறந்தே பிறந்ததாகக் கூறினர்.

எஞ்சிய குழந்தைகளும் இயற்கைக் காரணங்களால் மாண்டதாகவே அவர்கள் தெரிவித்தனர். குழந்தைகளின் மரணத்துக்கு உயிர்வாயுப் பற்றாக்குறை காரணமா என்பது பற்றிக் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. 

உங்கள் கருத்து

Top