Images
  • SEA games (1)
    படம்: AFP

மலேசியாவில் முறியடிக்கப்பட்ட தாக்குதல் முயற்சி

கோலாம்பூரில் நடைபெற்ற தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில் நடத்தப்படவிருந்த தாக்குதலை முறியடித்துள்ளதாக மலேசியக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அபு-சயாஃப் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த ஒருவர், அந்தத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

பிலிப்பீன்ஸ் குடிமகனான அந்த 25 வயதுச் சந்தேக நபர், சண்டை, ஆட்கடத்தல், வெளிநாட்டுப் பிணையாளிகளின் தலைகளை வெட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர் என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த நபர், மலேசியாவின் சுதந்திர தின அணிவகுப்பின்போது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகவும் காவல் துறை குறிப்பிட்டது.

தென் கிழக்காசியப் போட்டிகளின் நிறைவு நாளன்று அவரும் அபு-சயாஃபைச் சேர்ந்த மேலும் ஏழு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

உங்கள் கருத்து

Top