Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவும் இந்தியாவும் எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பாதுகாக்கவேண்டும் - சீன அதிபர்

சீன அதிபர் ஸி ஜின்பிங், சீனாவும் இந்தியாவும் ஒன்றையொன்று மதித்து எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பாதுகாக்கவேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

வாசிப்புநேரம் -
சீனாவும் இந்தியாவும் எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பாதுகாக்கவேண்டும் - சீன அதிபர்

படம்: AP Photo/Mark Schiefelbein, Pool

சீன அதிபர் ஸி ஜின்பிங், சீனாவும் இந்தியாவும் ஒன்றையொன்று மதித்து எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பாதுகாக்கவேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

BRICS மாநாட்டிற்கு இடையே இரு தலைவர்களும் நேரடியாகச் சந்தித்த நிலையில் அந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டுள்ள தரப்புகள். ஒன்றின் வளர்ச்சிக்கு மற்றொன்று மிரட்டல் அல்ல என்று அதிபர் ஸி தெரிவித்தார்.

இரு நாடுகளும் ஆரோக்கியமான, நிலையான உறவைப் பின்பற்ற வேண்டும் என அவர் சொன்னார்.

இருதரப்பு நல்லுறவு, சீன-இந்திய அடிப்படை நலன்களுக்கு ஏற்ப அமைந்துள்ளது எனத் திரு. ஸி கூறியதாக சீனாவின் ஸின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில், சீன அதிபரும் இந்தியப் பிரதமரும் ஆக்ககரமான பேச்சு நடத்தியிருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய டொக்லாம் எல்லைப் பகுதி தொடர்பில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பூசல் உருவாகித் தணிந்திருக்கும் நிலையில், இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்