Images
  • bitcoin
    (படம்:  AFP)

துபாயில் சொத்துகளுக்கு முதன்முறையாக மின்னிலக்க நாணயங்களைப் பயன்படுத்தலாம்

துபாயில் கட்டப்படவிருக்கும் புதிய குடியிருப்பு, வர்த்தகத் தொகுதியில் உள்ள வீடுகளை மின்னிலக்க நாணயங்களைக் கொண்டு வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐல் ஆஃப் மேன் (Isle of Man)-இல் தலைமையகத்தைக் கொண்டுள்ள Knox சொத்து மேம்பாட்டுக் குழுமம் அதனை அறிவித்தது.

தான் கட்டவிருக்கும் அந்தத் தொகுதிக்கு bitcoin எனும் மின்னிலக்க நாணயங்களை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. சொத்து மேம்பாட்டுத் திட்டம் ஒன்றுக்கு அத்தகைய நாணயங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவது இது முதல்முறை என்று கருதப்படுகிறது.

2.4 மில்லியன் சதுரஅடி கொண்ட அந்தத் தொகுதிக்கு "Aston Plaza and Residences" எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மொத்தம் 325 மில்லியன் டாலர் செலவில் அந்தத் திட்டம் மேற்கொள்ளப்படும்.
 

தொடர்புடைய செய்தி...

 'Bitcoins' எனும் மின்னிலக்க நாணயங்களில் முதலீடு செய்யலாமா?

உங்கள் கருத்து

Top