Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பல்வேறு துறைகளில் சீனாவுடன் கூடுதலாக ஒத்துழைக்க முனையும் சிங்கப்பூர்

சொங்சிங் (Chongqing) , குவாங்சி (Guangxi) ஆகிய பகுதிகளுக்கு, பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங், 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றி சீனாவின் உயர் அதிகாரிகளுடன் அவர் பேச்சு நடத்தியுள்ளார்.

வாசிப்புநேரம் -

சொங்சிங் இணைப்புத் திட்டத்திற்கு, அந்நகர மேயர் சாங் குவோசிங்கும், திரு. சானும் தலைமை வகிக்கின்றனர். திட்டம் கண்டுள்ள முன்னேற்றத்தைப் பற்றிப் பேசிய அவர்கள்,விமானத் துறை, நிதி, தளவாடம் போன்ற அம்சங்களில் கூடுதல் ஒத்துழைப்பு வாய்ப்புகளையும் ஆராய்ந்தனர்.

ஜியாங்பே விமான நிலையத்தின் புதிய முனையத்தில் அமையவுள்ள வர்த்தகப் பகுதியை திட்டமிடும் பணிகளில் சாங்கி விமான நிலையம் உதவி வருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 30 மில்லியன் பயணிகள் அந்த முனையத்தைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சொங்சிங் கட்சி செயலாளர் சென் மின்-எர்ரையும்  திரு. சான் சந்தித்து பேசினார்.

இருதரப்புக்கு இடையில் வலுவான, விரிவான உறவுகளை அவர்கள் மறுவுறுதி செய்துகொண்டனர். சொங்சிங் இணைப்புத் திட்டத்தின் முக்கியத்துவத்தை திரு. சென் வலியுறுத்தினார்.

போக்குவரத்து, தளவாடத் துறைகளில் சிங்கப்பூர் நிறுவனங்களுக்குப் பல வாய்ப்புகளை அந்தத் திட்டம் ஏற்படுத்தியுள்ளதை அமைச்சர் சான் சுட்டினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்