Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

எரிமலைக் குமுறலுக்கிடையில் நடைபெறும் பாலியின் " ஆடுகளம்"

பாலியில் எரிமலை வெடிப்பு அபாயம் தொடர்ந்து நீடித்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல், கோழிச்சண்டைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வாசிப்புநேரம் -

பாலியில் எரிமலை வெடிப்பு அபாயம் தொடர்ந்து நீடித்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல், கோழிச்சண்டைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

"தஜன்" என அழைக்கப்படும் கோழிச்சண்டை பாலியில் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. அந்த "ஆடுகளத்தில்" சேவல்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதைச் சுமார் 100 பேர் சுற்றியிருந்து காண்பர். அவற்றின் கால்களில் 10 செண்டிமீட்டர் நீளக் கத்தி இணைக்கப்பட்டிருக்கும்.

சில நிமிடங்களில் முடிகிறது போட்டி.

களத்தில் ரத்தக் குளம் பெருக, சேவல்கள் மரணம்வரை சண்டையிடும்.
வெற்றிபெறும் சேவலின் உரிமையாளர், போட்டியில் வைக்கப்பட்ட பந்தயப்பணத்தின் குறிப்பிட்ட பங்கினைப் பெறுவார். அத்துடன், தோற்றுப்போன சேவலை உணவாக உண்ணும் வாய்ப்பும் அவருக்குக் கிடைக்கும்.

(படங்கள்: AFP)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்