Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அமெரிக்காவின் முடிவை எதிர்த்து மலேசியாவிலும் இந்தோனேசியாவிலும் ஆர்ப்பாட்டம்

ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்ததை எதிர்த்து, இந்தோனேசியாவிலும் மலேசியாவிலும் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

வாசிப்புநேரம் -

ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்ததை எதிர்த்து, இந்தோனேசியாவிலும் மலேசியாவிலும் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் முடிவைக் குறைகூறுவோரின் வரிசையில் ஆசிய நாட்டுத் தலைவர்களும் இணைந்தனர்.

Channel NewsAsia

WATCH: Crowds gather in Kuala Lumpur to protest US President Donald J. Trump's decision to recognise Jerusalem as Israel's capital. (Video: Sumisha Naidu)

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில், ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்காவுக்கு எதிராக வாசகங்களை முழங்கினர். சிலர் திரு டிரம்ப்பின் உருவ பொம்மையையும் எரித்தனர்.

ஆசியாவில், மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவை நிராகரிக்கும்படி அனைத்து முஸ்லிம்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தோனேசியாவில், நுற்றுக்கணக்கானோர் ஜக்கர்த்தா நகரில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தி அவர்கள் சமய வாசகங்களை முழங்கினர்.

அடுத்த சில ஆண்டுகளில், அமெரிக்கா, தனது தூதரகத்தை ஜெருசலம் நகரத்தில் அமைக்கப் போவதாகத் திரு டிரம்ப் நேற்று முன்தினம் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்