Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அம்னோ தலைமைப் பொறுப்புகளுக்கு நஜிப்பிற்குப் 'போட்டி இருக்காது'

மலேசியாவின் ஆளும் அம்னோ கட்சியின் தலைவர்  திரு. நஜிப்புக்கும் துணைத் தலைவருக்கும் போட்டி இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

மலேசியாவின் ஆளும் அம்னோ கட்சியின் தலைவர்  திரு. நஜிப்புக்கும் துணைத் தலைவருக்கும் போட்டி இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதனைக் கட்சியினர் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் மலேசியாவில் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும்.

மலேசியப் பிரதமர் நஜிப் கட்சித் தலைவராகவும் அஹ்மத் ஸாஹித் ஹமிடி துணைத் தலைவராகவும் நீடிப்பார்கள். முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் அம்னோ கட்சியின் ஆண்டுக்கூட்டம் நடந்துவருகிறது.

நாட்டின் 14வது பொதுத்தேர்தலில் முழுக்கவனமும் இருக்க வேண்டும்  என்று துணைப் பிரதமர் ஸாஹித் தெரிவித்தார். இந்த நேரத்தில் கட்சிப் பொறுப்புகளுக்காகப் போட்டி போடக்கூடாது.

கட்சியின் நிலைகுறித்து அம்னோ கட்சியின் மூன்று முக்கிய தலைவர்களும் முழு நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்த வகையில் தங்கள் பொறுப்புகளைத் தொடர அவர்கள் தயாராக இருப்பதாகத் திரு ஸாஹித் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்