Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: ரொஹிஞ்சா மக்களுக்குத் தற்காலிகப் புகலிடம் வழங்கத் தயார்

அகதிகள் தொடர்பான ஐக்கிய நாட்டு ஒப்பந்தத்தில் சேராத மலேசியா, அகதிகளைச் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதுகிறது. 

வாசிப்புநேரம் -
மலேசியா: ரொஹிஞ்சா மக்களுக்குத் தற்காலிகப் புகலிடம் வழங்கத் தயார்

( படம்: AFP/STR )

ரொஹிஞ்சா மக்களுக்குத் தற்காலிகப் புகலிடம் வழங்கத் தயார் என்று மலேசியா தெரிவித்தது.

மலேசியாவின் கடலோரக் காவல்படை ரொஹிஞ்சா மக்களைத் திருப்பியனுப்பாமல் அவர்களுக்கு உதவி செய்யத் தயாராய் இருப்பதாக அந்நாட்டுக் கடல்துறை அமைப்பு கூறியது. 

வரும் வாரங்களிலும் மாதங்களிலும் படகுகளில் அதிகமான ரொஹிஞ்சா மக்கள் வருவார்கள் என்று மலேசியா எதிர்பார்க்கிறது. 

அடையாளப் பத்திரங்கள் இல்லாத வெளிநாட்டினர் வழக்கமாகத் தடுத்துவைக்கப்படும் நிலையங்களில் ரொஹிஞ்சா மக்கள் தங்க வைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அகதிகள் தொடர்பான ஐக்கிய நாட்டு ஒப்பந்தத்தில் சேராத மலேசியா, அகதிகளைச் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதுகிறது. 

தாய்லந்தும் ரொஹிஞ்சா மக்களுக்குத் தற்காலிகப் புகலிடம் வழங்கத் தயார் என்று தெரிவித்துள்ளது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்