Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து: கண்பார்வை இல்லாதவர்களுக்கு உதவி, ஃபேஸ்புக் வழி

சில நாட்களுக்கு முன்னர், தாய்லந்தைச் சேர்ந்த குமாரி சோலடிப் யிம்யோங், சிங்கப்பூரில் கொஞ்ச காலம் தங்கியிருந்தபோது  சில சிரமங்களை எதிர்கொண்டார்.

வாசிப்புநேரம் -

சில நாட்களுக்கு முன்னர், தாய்லந்தைச் சேர்ந்த குமாரி சோலடிப் யிம்யோங், சிங்கப்பூரில் கொஞ்ச காலம் தங்கியிருந்தபோது சில சிரமங்களை எதிர்கொண்டார். அந்த 37 வயதுப் பெண்ணுக்குக் கண்பார்வை இல்லை. அறையின் குளிர்சாதனப்பெட்டியின் வெப்பநிலை அளவை மாற்றவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டியிருந்தது.

ஹோட்டல் அறைக்கான சேவையை நாடுவதற்குப் பதிலாகக் குளிர்சாதனப் பெட்டியை இயக்கும் கருவியையும் தண்ணீர் போத்தலையும் படமெடுத்து ஃபேஸ்புக் குழுவின் பக்கத்தில் பதிவேற்றினார்.

பக்கத்தில் அப்போது இணைந்திருந்தவர்கள், குமாரி யிம்யோங்கிற்குத் தேவையான விவரங்களை அளித்தனர்.

Help Us Read என்பது அந்தக் குழுவின் பெயர். இரண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் அந்தத் தளம், கண்பார்வை தெரியாத மக்களுக்கு உதவி வருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்