Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியா: சூடுபிடித்துள்ள சமூக ஊடகங்கள்

இந்தோனேசியர்களுக்குச் சமூக ஊடகம் என்றால் கொள்ளைப் பிரியம். ஆசிய பசிஃபிக் வட்டாரத்திலேயே இந்தோனேசியாவே தனது ஆகப் பெரிய சந்தை என்று Instagram  கூறுகிறது.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியர்களுக்குச் சமூக ஊடகம் என்றால் கொள்ளைப் பிரியம். ஆசிய பசிஃபிக் வட்டாரத்திலேயே இந்தோனேசியாவே தனது ஆகப் பெரிய சந்தை என்று Instagram கூறுகிறது. இந்தோனேசியாவில் மாதத்துக்கு 45 மில்லியன் பேர் அந்தத் தளத்தைத் பயன்படுத்துகின்றனர்.

ஓராண்டுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் அந்த எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவில் வெகுவாகச் சூடுபிடித்துவரும் மற்றொரு தளம், டுவிட்டர். தங்கள் தளத்தை ஆக அதிகமாகப் பயன்படுத்துவோரில் இந்தோனேசியர்களும் அடங்குவர் என டுவிட்டரைக் குறிப்பிட்டது.
டுவிட்டரைப் பயன்படுத்தும் உலகச் சந்தைப் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இருக்கிறது இந்தோனேசியா.
இந்தோனேசியர்கள் அதிகம் விரும்பும் மற்றொரு சமூகத் தளம், ஃபேஸ்புக். ஃபேஸ்புக் பயன்படுத்தும் நாடுகளில் 4ஆவது ஆகப் பெரிய சந்தை, இந்தோனேசியா.

ஆனால் பொய் தகவல்களைப் பகிர்வது சமூக ஊடகங்களின் முன்னேற்றத்துக்குப் முட்டுக்கட்டையாக உள்ளது. பொய் தகவல்கள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கத்துடன் பல தரப்புகளும் இறங்கியுள்ளன.

255 மில்லியன் இந்தோனேசியர்களில் கிட்டத்தட்டப் பாதிப் பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இன்னும் அதிகமானோரை இணையத்தின் பக்கம் ஈர்க்கவும், அதை மேலும் பயனுள்ளதாக்கவும் அதிகாரிகள் விரும்புகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்