Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலீப்பீன்ஸ் இராணுவத்திற்கு பயிற்சிகள் வழங்க துருப்புகளை அனுப்பியுள்ள ஆஸ்தி

பிலீப்பீன்ஸ் இராணுவத்திற்கு  பயிற்சிகள் வழங்க ஆஸ்திரேலியா  தனது துருப்புகளை அனுப்பவுள்ளது.

வாசிப்புநேரம் -
பிலீப்பீன்ஸ் இராணுவத்திற்கு பயிற்சிகள் வழங்க துருப்புகளை அனுப்பியுள்ள ஆஸ்தி

படம்: REUTERS/Romeo Ranoco

பிலீப்பீன்ஸ் இராணுவத்திற்கு பயிற்சிகள் வழங்க ஆஸ்திரேலியா தனது துருப்புகளை அனுப்பவுள்ளது.

மராவியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்த்து போராடி வரும் பிலீப்பீன்ஸ் இராணுவத்திற்குப் பயிற்சிகள் வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சர் மரிஸ் பெயின் கூறினார்.

மணிலாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவருடன் பிலிப்பீன்ஸ்சின் தற்காப்பு அமைச்சர் டெல்ஃபின் லொரென்சாவும் கலந்து கொண்டார்.

மராவியில் தொடரும் சண்டையில் ஆஸ்திரேலியாவின் துருப்புகள் கலந்து கொள்ளாது என்றும் அவர் விளக்கினார். கடந்த மே மாதத்திலிருந்து மராவியில் கிளர்ச்சியாளர்களும் பிலிப்பீன்ஸ் இராணுவத்திற்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்