Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பங்களாதேஷ்: ரொஹிஞ்சா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விமானம் மூலம் அனுப்பிய மலேசியா

மலேசியா,  ரொஹிஞ்சா அகதிகளுக்கு உதவும் வகையில், உணவு, நிவாரணப் பொருட்களை விமானம் மூலம் பங்களாதேஷூக்கு அனுப்பி வைத்துள்ளது.

வாசிப்புநேரம் -

மலேசியா, ரொஹிஞ்சா அகதிகளுக்கு உதவும் வகையில், உணவு, நிவாரணப் பொருட்களை விமானம் மூலம் பங்களாதேஷூக்கு அனுப்பி வைத்துள்ளது.

இன்று பிற்பகலில் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் கொடியசைக்க, சுபாங் ஆகாயப் படைத் தளத்திலிருந்து அந்த விமானம் பங்களாதேஷுக்குப் புறப்பட்டது.
மனிதநேய நிவாரணப் பணிகளை மலேசிய ஆகாயப் படை வழிநடத்தும்.

மியன்மார்- பங்களாதேஷ் எல்லையில் உள்ள Rohingyaக்களின் தேவைகளையும், தளவாடப் பொருட்களையும் மலேசிய ஆகாயப் படை மதிப்பிடும். அந்த எல்லையில், இராணுவ மருத்துவமனை ஒன்றைக் கட்ட மலேசியா திட்டமிட்டுள்ளது.

அதன் தொடர்பில் பங்களாதேஷுடன் இணைந்து செயல்படுவதாகத் திரு. நஜிப் ரசாக் கூறியிருந்தார்.

இதற்கிடையே, மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் வன்முறை அதிகரித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரத்தேடவுங் நகரைச் சுற்றியுள்ள 8 கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அந்த இடங்களில் ரொஹிஞ்சாக்கள் அதிக அளவில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகக் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, தோக்கியோ, மணிலா, ஜக்கர்த்தா, கோலாலம்பூர் ஆகிய நகரங்களில் உள்ள மியன்மார் தூதரங்களுக்கு வெளியே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

(படம்: Reuters)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்