Images
  • Noodles

'துர்நாற்ற' நூடல்ஸால் கைகலப்பு - ஆடவர் மரணம்

பேங்காக், தாய்லந்து: பேங்காக்கின் கான் நயாவ் மாவட்டத்தில் ஒருவர் சமைத்திருந்த நூடல்ஸிலிருந்து அவரது அண்டை வீட்டாருக்குத் துர்நாற்றம் வீசியது. அதனால் இரு தரப்பினருக்கும் இடையே மூண்ட கைகலப்பில் ஒருவர் மாண்டதாகவும் 3 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தார்.

47 வயது சோம்சாய் க்லின்ஹோம் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

கடந்த வியாழக்கிழமை, சோம்சாயின் தம்பி நூடல்ஸ் சமைத்துக்கொண்டிருந்தார். நூடல்ஸிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அவர்களது அண்டை வீட்டார் கூறினர். அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் காவல் நிலையத்திற்குச் சென்று பிரச்சினையைப் பற்றி விளக்கினர்.

அடுத்த நாள் அவர்களுக்கிடையில் மீண்டும் தகராறு வெடித்தது. அண்டை வீட்டாரின் தாயாரிடம் சோம்சாய் குரலை உயர்த்திப் பேசியதால் அம்மூவரும் வீட்டுக்குள் சென்று அவரை அடித்ததாகக் கூறப்படுகிறது.

காயங்களால் சோம்சாய் தமது வீட்டு வாசலில் மாண்டதாகக் காவல்துறையினர் கூறினர்.

ரத்தம் தோய்ந்த கத்தி, விளையாட்டு மட்டை, மரக்கட்டை ஆகியவற்றை சம்பவ இடத்திலிருந்து காவல் துறையினர் கைப்பற்றினர்.

உங்கள் கருத்து

Top