Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: சர்ச்சைமிக்க விளையாட்டுக்குத் தடை

மலேசிய அதிகாரிகள், தடை செய்யப்பட்ட “Fight of Gods” இணைய விளையாட்டைக் கொண்டுள்ள Steam இணையத் தளம் மீண்டும் செயல்பட அனுமதி தந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

புத்ராஜெயா: மலேசிய அதிகாரிகள், தடை செய்யப்பட்ட “Fight of Gods” இணைய விளையாட்டைக் கொண்டுள்ள Steam இணையத் தளம் மீண்டும் செயல்பட அனுமதி தந்துள்ளனர்.

தைவானிய நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டில் ஏசு, புத்தர் போன்றோர் தங்களுக்கிடையில் சண்டையிடுவது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இன, சமய நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் எந்தச் செயலையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் தெரிவித்தது.

அந்த விளையாட்டை அகற்ற ஆணையம், Steam  இணையத்தளத்திற்கு 24 மணி நேர அவகாசம் தந்தது.

அதற்கு உடன்படத் தவறிய காரணத்திற்காக  Steam  இணையத்தளம் நேற்று தடை செய்யப்பட்டது.

“Fight of Gods” காணொளி விளையாட்டை அகற்ற இணையத்தளம் ஒப்புக்கொண்ட பிறகே, மீண்டும் செயல்படுவதற்கான அனுமதியை ஆணையம் அதற்குத் தந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்