Images
  • Rohingya people

ரொஹிஞ்சா மக்களுக்கு எதிரான வன்செயல்கள் நிறுத்தப்படவேண்டும்: இந்தியா

ரொஹிஞ்சா இன மக்களுக்கு எதிரான வன்செயல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என இந்தியா கோரியுள்ளது.

மியன்மாரின் மேற்குப் பகுதியிலுள்ள ரக்கேன் மாநிலத்தைச் சேர்ந்த ரொஹிஞ்சா மக்கள் பலர் பங்களாதேஷுக்கு அகதிகளாய்ச் சென்றுள்ளனர்.

ரக்கேன் மாநிலத்தில் நிலவரம் கட்டுப்பாட்டுடனும் புரிந்துணர்வுடனும் கையாளப்படவேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்னர் மியன்மாருக்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்தியத் தரப்பிலிருந்து அந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ரக்கேன் மாநிலத்திலிருந்து இதுவரை சுமார் 300, 000 ரொஹிஞ்சா இனத்தவர்கள் வெளியேறினர்.

உங்கள் கருத்து

Top