Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானில் ரயிலில் பூனைகள் ஒய்யார நடை

மதிய வேளையில் ரயில் சேவையைப் பயன்படுத்தியோருக்குக் காத்திருந்தது குதூகலமான ஒரு காட்சி. சுமார் 30 பூனைகள் ரயிலில் பயணிகளுக்கு இடையே ஓடி விளையாடின.

வாசிப்புநேரம் -
ஜப்பானில் ரயிலில் பூனைகள் ஒய்யார நடை

(படம்: Reuters)

ஒக்காகி, ஜப்பான்: மதிய வேளையில் ரயில் சேவையைப் பயன்படுத்தியோருக்குக் காத்திருந்தது குதூகலமான ஒரு காட்சி.
சுமார் 30 பூனைகள் ரயிலில் பயணிகளுக்கு இடையே ஓடி விளையாடின.

தெருக்களில் திரியும் பூனைகள் கொல்லப்படுவது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க அந்த முயற்சி எடுக்கப்பட்டது.

அரசாங்கச் சார்பற்ற அமைப்பான Kitten Cafe Sanctuary-யும் யோரோ ரயில்வே நிறுவனமும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

2004ஆம் ஆண்டு, காப்பகங்களில் அனுமதிக்கப்பட்ட பூனைகளின் எண்ணிக்கை 237,246.

சென்றாண்டு அந்த எண்ணிக்கை சுமார் 70% குறைந்து 72,624 ஆனது.

அதனால் பூனைகள் கொல்லப்படும் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்தது.

ஜப்பானில் மொத்தம் 9.8 மில்லியன் பூனைகள் உள்ளன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்