Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"லிங்க்ட் இன்" வழியாக ஜெர்மானிய அதிகாரிகளை வேவு பார்ப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு

ஜெர்மானிய அதிகாரிகள், அரசியல்வாதிகளின் "லிங்க்ட் இன்"(LinkedIn) பக்கங்கள் வழியாக சீனா வேவு பார்த்து வருவதாக ஜெர்மானிய வேவுத்துறை கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -

ஜெர்மானிய அதிகாரிகள், அரசியல்வாதிகளின் "லிங்க்ட் இன்"(LinkedIn) பக்கங்கள் வழியாக சீனா வேவு பார்த்து வருவதாக ஜெர்மானிய வேவுத்துறை கூறியுள்ளது.

சுமார் 10,000 ஜெர்மானியர்களின் தகவல்களை லிங்க்ட் இன் பக்கம் வழியாக சீனா பெற முயன்றதாக ஜெர்மானிய வேவுத்துறைப் பிரிவான BfV கூறியது.

போலிப் பக்கங்கள் மூலமாக அந்தத் தகவல்களை சீனா திரட்டிவந்ததாக அது தெரிவித்தது.

ஜெர்மானிய அரசாங்கத்தின் இரகசியங்களை ஊடுருவும் முயற்சி இது என்று BfV சுட்டியுள்ளது.

இதுபோன்ற போலிப் பக்கங்களின் மூலம் உயர்பதவிகளில் உள்ள அரசியல்வாதிகளைக் குறிவைத்து அவர்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவது குறித்து BfV அக்கறை தெரிவித்தது.

செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜெர்மனியத் தேர்தலின் முடிவை மாற்றும் வகையில் வேவு பார்க்கும் செயல்கள் இடம்பெற்றது கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக BfV தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்