Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்தில் வரதட்சணையுடன் மாயமான மணமகள் கைது

தாய்லந்தில் குறைந்தது 12 ஆடவர்களைக் கல்யாணம் செய்து அவர்களின் வரதட்சணைப் பணத்தோடு தப்பியதாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணைக் காவல்துறை கைதுசெய்துள்ளது. 32 வயது ஜரியபொர்ன் புவாயாய் (Jariyaporn Buaya) அதிகாரிகளிடமிருந்து தப்பியோட முயற்சி செய்தபோது சம்ப்ரான் வட்டாரத்தில் பிடிபட்டார்.

வாசிப்புநேரம் -
தாய்லந்தில் வரதட்சணையுடன் மாயமான மணமகள் கைது

படம்: Facebook/จริยาภรณ์

தாய்லந்தில் குறைந்தது 12 ஆடவர்களைக் கல்யாணம் செய்து அவர்களின் வரதட்சணைப் பணத்தோடு தப்பியதாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணைக் காவல்துறை கைதுசெய்துள்ளது. 32 வயது ஜரியபொர்ன் புவாயாய் (Jariyaporn Buaya) அதிகாரிகளிடமிருந்து தப்பியோட முயற்சி செய்தபோது சம்ப்ரான் வட்டாரத்தில் பிடிபட்டார்.

தான் திருமணம் செய்தோரில் ஒருவருடன் இணைந்து சில குற்றச்செயல்களில் ஜரியபொர்ன் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.  அவருக்கு எதிராகச் சில புகார்களும் பதிவுசெய்யப்பட்டன.

ஃபேஸ்புக் வழியாக ஜரியபொர்ன் ஆடவர்களை அணுகியதாக வழக்குரைஞர்கள் கூறினர்.  தம்முடன் பழ வியாபாரத்தில் ஈடுபடும்படி ஆடவர்களைக் கேட்டுக்கொண்ட பின்னர் அவர்களுடன்  அணுக்கமாகப் பழகியிருக்கிறார் அவர்.

அவர்களைத் திருமணம் செய்துகொண்ட பின்னர் ஜரியபொர்ன் ஆடவர்களின் பணத்தோடு ஓட்டம் பிடித்துள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்