Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

துணியால் மூடிமறைக்கப்பட்ட சீன தெய்வச் சிலை - பெருகிவரும் பதற்றம்

கிழக்கு ஜாவாவில் ஓர் ஆலய வளாகத்தில் எழுப்பப்பட்டிருக்கும் சீன தெய்வச் சிலையை இடிக்கக் கோரி முஸ்லிம்களும், தேசியவாதிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

வாசிப்புநேரம் -
துணியால் மூடிமறைக்கப்பட்ட சீன தெய்வச் சிலை - பெருகிவரும் பதற்றம்

(படம்: Reuters)

இந்தோனேசியா: கிழக்கு ஜாவாவில் ஓர் ஆலய வளாகத்தில் எழுப்பப்பட்டிருக்கும் சீன தெய்வச் சிலையை இடிக்கக் கோரி முஸ்லிம்களும், தேசியவாதிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் நெருக்குதல்களைச் சமாளிப்பதில் உறுதியாய் இருக்குமாறு இந்தோனேசிய அரசாங்கம், அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

சீன தெய்வ உருவச்சிலையான குவான் யூ 30 மீட்டர் உயரம் கொண்டது. கடந்த மாதம் அது திறக்கப்பட்டது.

பல்வேறு வண்ணங்களில் பளிச்செனக் காணப்படும் அந்தச் சிலை, ஆசியாவில் ஆக உயரமான குவான் யூ சிலையாகக் கருதப்படுகிறது.

சுரபாயா நகரத்திற்கு மேற்கே டுபான் நகரில் உள்ளது அந்தச் சிலை. ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, சிலையின் மேற்பாதி துணியைக் கொண்டு மூடப்பட்டது. அந்தச் செயல், சமூக ஊடகங்களில் இந்தோனேசியர்கள் சிலரின் பாராட்டுகளையும் வேறு சிலரின் கண்டனங்களையும் ஈர்த்துள்ளது.

சிலையை இடிக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் நெருக்குதல் கொடுத்தாலும் அதற்கு அதிகாரிகள் விட்டுக்கொடுக்கக்கூடாது என்று இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ அலுவலகத்தின் நிர்வாகத் தலைவர் திரு டெட்டென் மஸ்டுக்கி செய்தியாளர்களிடம் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்