Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மணமேடையில் பழைய சேலையில் காணப்பட்ட மணப்பெண் - ஆடம்பரமான திருமணங்கள் குறித்து விவாதம்

பாட்டியின் பருத்திச் சேலையை அணிந்து, நகை, ஒப்பனை ஏதுமில்லாமல் மணமேடையில் அமர்ந்திருக்கும் ஒரு மணப்பெண்ணின் புகைப்படம் பங்களாதேஷில் சூடான விவாதத்தை எழுப்பியுள்ளது.

வாசிப்புநேரம் -
மணமேடையில் பழைய சேலையில் காணப்பட்ட மணப்பெண் - ஆடம்பரமான திருமணங்கள் குறித்து விவாதம்

(படம்: AFP)

பாட்டியின் பருத்திச் சேலையை அணிந்து, நகை, ஒப்பனை ஏதுமில்லாமல் மணமேடையில் அமர்ந்திருக்கும் ஒரு மணப்பெண்ணின் புகைப்படம் பங்களாதேஷில் சூடான விவாதத்தை எழுப்பியுள்ளது.

வளர்ந்து வரும் நாடான பங்களாதேஷில் அதிகச் செலவில் நடந்துவரும் தடபுடல் திருமணங்கள் குறித்த கேள்வியை அது எழுப்பியுள்ளது.

வசதி குறைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் ஓர் அறநிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் மணப்பெண் தஸ்னிம் ஜாரா. திருமண நாளன்று மணப்பெண்கள் உச்சி முதல் பாதம் வரை தங்கம் அணிய வேண்டும் என்ற மனப்போக்கை முறியடிக்க முனைந்தார் அவர்.

முகத்தை வெண்மையாக்கும் களிம்புகள், தங்க ஆபரணங்கள், விலையுயர்ந்த சேலைகளை அணிவது மணப்பெண்களுக்குத் தேவையில்லை என்கிறார் தஸ்னிம். பல தருணங்களில் ஆடம்பரமான மணப்பெண்களின் தோற்றம் அவர்களது உண்மையான பணவசதியையோ, சுதந்திரத்தையோ பிரிதிபலிப்பதில்லை என்று கூறினார் அவர்.

தஸ்னிமின் முடிவைப் பல உறவினர்கள் எதிர்த்தனர். சிலர் திருமணத்தில் மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் மறுத்தனராம்.

Facebookஇல் பதிவுசெய்யப்பட்ட அவரது படம் சுமார் 91,000 முறை "லைக்" செய்யப்பட்டது, 24,000 முறை பகிரப்பட்டது, 1,400 பேரிடமிருந்து கருத்துக்கள் வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஆதரவான கருத்துக்கள்.

எதிர்காலத்தில் நல்ல மாற்றம் வரும் என நம்பிக்கையுடன் இருக்கிறார் தஸ்னிம் ஜாரா.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்