Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கிராமவாசிகளைக் கொன்ற யானைக்கு முடிவுகட்ட வேட்டைக்காரர் வரவழைப்பு

இந்தியாவில் கிராமங்களுக்குள் புகுந்து 15 பேரைக் கொன்ற யானையைக் கொல்ல, பிரபல வேட்டைக்காரர் நவாப் ஷாஃபட் அலி கான்  களமிறங்கியுள்ளார்.

வாசிப்புநேரம் -
கிராமவாசிகளைக் கொன்ற யானைக்கு முடிவுகட்ட வேட்டைக்காரர் வரவழைப்பு

(படம்: AFP)

இந்தியாவில் கிராமங்களுக்குள் புகுந்து 15 பேரைக் கொன்ற யானையைக் கொல்ல, பிரபல வேட்டைக்காரர் நவாப் ஷாஃபட் அலி கான் களமிறங்கியுள்ளார்.

மார்ச் மாதம், பீஹாரில் நால்வரை மிதித்துக் கொன்றது யானை. அண்மையில் உள்ள ஜார்கந்துக்குள்ளும் புகுந்த அது அங்கு 11 பேரைப் பலிகொண்டது.

கூட்டத்திலிருந்து பிரிந்ததாக நம்பப்படும் அந்த யானை, சுற்றித் திரிந்து சஹிப்கஞ்ச் வட்டாரக் கிராமங்களுக்குள் புகுந்தது.

இந்தியாவின் ஆக ஏழ்மையான பழங்குடியினர் வாழும் கிராமத்தை யானை தாக்கியது.

யானையை மயக்கமருந்து கொண்டு பிடிக்கும் முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அதைக் கொல்லும் முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த நான்கு நாட்களில் இருவரைக் கொன்ற யானையை அடக்க இறுதி முடிவாக வேட்டைக்காரர் அழைக்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்திலிருந்து வரவழைக்கப்பட்ட அவர் குறிபார்த்து சுடுவதில் வல்லவர்; இதற்கு முன் மனிதர்களைக் கொன்று தின்ற புலியை வீழ்த்தியிருக்கிறார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்