Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மனநல மருத்துவமனையில் நோயாளியாகச் சேரவிருக்கும் போலி மருத்துவர்

மலேசியாவின் கெடா மாநில மருத்துவமனையில் மருத்துவராக நடித்த ஓர் ஆடவரை அதிகாரிகள் மனநல மருத்துவமனைக்கு அனுப்பவுள்ளனர்.

வாசிப்புநேரம் -
மனநல மருத்துவமனையில் நோயாளியாகச் சேரவிருக்கும் போலி மருத்துவர்

படம்: AFP/Joe Raedle

மலேசியாவின் கெடா மாநில மருத்துவமனையில் மருத்துவராக நடித்த ஓர் ஆடவரை அதிகாரிகள் மனநல மருத்துவமனைக்கு அனுப்பவுள்ளனர்.
சுல்தானா பஹியா மருத்துவமனையில் அந்த 22 வயது ஆடவர் தன்னை ஒரு மருத்துவர் என்று சொல்லி அங்குள்ளவர்களை ஓராண்டு காலமாக ஏமாற்றிவந்தார்.

"டாக்டர் ரிட்ஸ்வான்" என்று அவர் தன்னைக் கூறிக்கொண்டார்.
நோயாளிகளிடம் அவர் பேசிக்கொண்டிருந்தபோது காவல்துறை அதிகாரிகள் அவரைக் கைதுசெய்தனர். மருத்துவமனை கொடுத்த புகாரைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

மனநல மருத்துவமனைக்கு ஆடவரை அனுப்பும் முன்னர், சுல்தானா பஹியா மருத்துவமனையிலிருந்து கடிதம் ஒன்றை எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவல் துறையினரின் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
பொதுத்துறை ஊழியராய் ஆள்மாறாட்டம் செய்ததாகப் போலி மருத்துவர் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்வது குறித்து காவல்துறையினர் ஆராய்ந்துவருகின்றனர்.

ஆடவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்