Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மனிதர்களால் உருவாக்கப்பட்ட வெப்பமண்டலக் காட்டை UNESCO பட்டியலில் சேர்க்க மலேசியா முயற்சி

கோலாலம்பூரில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட வெப்பமண்டலக் காட்டை UNESCO உலக மரபுடைமைத் தலத்துக்கான பட்டியலில் இடம்பெறச் செய்வதற்கு மலேசியா முயன்று வருகிறது.

வாசிப்புநேரம் -

கோலாலம்பூரில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட வெப்பமண்டலக் காட்டை UNESCO உலக மரபுடைமைத் தலத்துக்கான பட்டியலில் இடம்பெறச் செய்வதற்கு மலேசியா முயன்று வருகிறது. அவ்வாறு அது இடம்பெற்றால், சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அதன் மூலம் வருமானமும் அதிகரிக்கும் என்றும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
ஆய்வுக்காகவும், அந்தப் பகுதியைப் பாதுகாக்கவேண்டும் என்று கூறப்படுகிறது.

கோலாலம்பூரின் கெப்பொங் (Kepong) புறநகரில் 544 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த வெப்பமண்டலக் காடு. இயற்கையான வெப்பமண்டலக் காட்டையும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் காட்டையும் பார்க்கும்போது அதிக வேறுபாடு இல்லை.

FRIM என்று அழைக்கப்படும் மலேசியாவின் வன ஆய்வுக்கழகம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. 1920ஆம் ஆண்டில் பிரிட்டிஷ்காரர்களால் அது உருவாக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் வெட்டு மரங்கள் ரயில் பாதையின் தண்டவாளத்தை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டன. அதனால் அந்த வனப்பகுதியில் இருந்த மரங்கள் முழுமையாக அழிந்து போவதற்கு முன்னால் அவற்றைப் பற்றி ஆய்வு செய்வதற்காகக் கழகம் நிறுவப்பட்டது.

93 அருகிவரும் உயிரினங்களில் 73 வகை உயிரினங்களை மலேசியாவின் வன ஆய்வுக் கழகம் அமைந்துள்ள பகுதியிலேயே காணலாம். 15 மில்லியன் வகைகளைச் சேர்ந்த மரங்களும் அந்தப் பகுதியில் உள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்