Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான்-இந்தியா கூட்டு முயற்சியில் இந்தியாவின் முதல் அதிவேக ரயில் சேவைத் திட்டம்

508 கிலோ மீட்டர் தொலைவுள்ள விரைவு ரயில் தடத்தை 2023ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முதலாவது அதிவேக ரயில் திட்டம் அது.  

வாசிப்புநேரம் -
ஜப்பான்-இந்தியா கூட்டு முயற்சியில் இந்தியாவின் முதல் அதிவேக ரயில் சேவைத் திட்டம்

(படம் : AFP)


இந்தியாவின் ரயில் கட்டமைப்பு மிகப் பெரியது.

நாள்தோறும் அதைச் சுமார் 22 மில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள்.

உலகின் சுறுசுறுப்பான ரயில் சேவைகளில் இதுவும் ஒன்று.

உலகின் ஆபத்தான ரயில் சேவைகளில் ஒன்றும்கூட.

2012இல் வெளிவந்த அரசாங்க அறிக்கையில், கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர் ஆண்டுதோறும் ரயில் தொடர்புடைய விபத்துகளில் மாண்டுபோவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் ரயில் சேவைகளை புதுப்பிக்க பில்லியன் டாலர் கணக்கில் முதலீடு செய்ய, தேர்தல் பிரசாரத்தின்போது உறுதி கூறியிருந்தார்.

அதன் ஒருபகுதியே இந்த அதிவேக விரைவு ரயில்.

இன்று இந்தியாவுக்குச் சென்று சேர்ந்துள்ள ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, நாளை புதிய ரயில் சேவைக்கான தொடக்க விழாவில் பங்கேற்கவுள்ளார்.

இருபிரதமர்களும் புதிய ரயில் கட்டமைப்புக்கான நிலந்திருத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பர்.

அதிவேக ரயில் சேவை, வர்த்தக நகரான மும்பையை குஜராத்தின் அகமதாபாத் நகருடன் இணைக்கும்.

புதிய ரயில், பயண நேரத்தை எட்டு மணி நேரத்திலிருந்து மூன்றரை மணி நேரமாகக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.

508 கிலோ மீட்டர் தொலைவுள்ள விரைவு ரயில் தடத்தை 2023ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதலாவது அதிவேக ரயில் திட்டம் அது.

மணிக்கு சுமார் 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக ரயில், 750 பேரை ஏற்றிச் செல்லக்கூடியது.

இரட்டைத் தடங்களைக் கொண்ட விரைவு ரயில் பாதை,
21 கிலோமீட்டருக்கு சுரங்கத்துக்குள் செல்லும்.

அதில் 7 கிலோ மீட்டர் தொலைவுள்ள பாதை, கடலடியில் அமைக்கப்படும்.

மொத்தத் தடத்தில் 12 ரயில் நிறுத்தங்கள் இருக்கும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்