Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

80-ஆண்டு நிறைவை எட்டியுள்ள நான்ஜிங் படுகொலை

சீனாவின் முன்னைய தலைநகரான நான்ஜிங்கில், ஜப்பானியத் துருப்புகளால் நடத்தப்பட்ட படுகொலை சம்பவம் 80-ஆண்டு நிறைவை எட்டியுள்ளது. 

வாசிப்புநேரம் -
80-ஆண்டு நிறைவை எட்டியுள்ள நான்ஜிங் படுகொலை

(படம்: AFP)

சீனாவின் முன்னைய தலைநகரான நான்ஜிங்கில், ஜப்பானியத் துருப்புகளால் நடத்தப்பட்ட படுகொலை சம்பவம் 80-ஆண்டு நிறைவை எட்டியுள்ளது.

அதனை ஒட்டி நடைபெறவிருக்கும் அஞ்சலி நிகழ்ச்சியில், சீனத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள்.

சீன அதிபர் ஸி ஜின்பிங் (Xi Jinping) அந்த நிகழ்வில் கலந்துகொள்வது பற்றி இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

1937-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், 13-ஆம் தேதி, ஜப்பானியத் துருப்புகளால், சுமார் 300,000 பேர், சீனாவில் கொல்லப்பட்டனர்.

ஜப்பான் அந்த எண்ணிக்கை தவறானது என்று நெடுநாளாக மறுத்து வந்துள்ளது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்