Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வட கொரிய அணுவாயுதச் சோதனையில் கதிரியக்க வாயு கசிந்த தடயம் கண்டுபிடிப்பு - தென் கொரியா

வட கொரியா இந்த மாதத் தொடக்கத்தில் மேற்கொண்ட அணுவாயுதச் சோதனையில் கதிரியக்க வாயு கசிந்த தடயம் கிடைத்திருப்பதைத் தென் கொரியா உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் அந்தச் சோதனை வட கொரியா கூறிக்கொள்ளும் ஹைட்ரஜன் அணுக்குண்டிற்கு உரியதா என்பதைத் தென் கொரியாவால் உறுதிப்படுத்த முடியவில்லை.

வாசிப்புநேரம் -
வட கொரிய அணுவாயுதச் சோதனையில் கதிரியக்க வாயு கசிந்த தடயம் கண்டுபிடிப்பு - தென் கொரியா

படம்: Han Jong-Chan/Yonhap/via REUTERS

வட கொரியா இந்த மாதத் தொடக்கத்தில் மேற்கொண்ட அணுவாயுதச் சோதனையில் கதிரியக்க வாயு கசிந்த தடயம் கிடைத்திருப்பதைத் தென் கொரியா உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் அந்தச் சோதனை வட கொரியா கூறிக்கொள்ளும் ஹைட்ரஜன் அணுக்குண்டிற்கு உரியதா என்பதைத் தென் கொரியாவால் உறுதிப்படுத்த முடியவில்லை.

வட கொரியா தனது ஆறாவது அணுவாயுத சோதனையை இம்மாதம் 3ஆம் தேதி மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றம், வட கொரிய மீது புதிய வர்த்தகத் தடைகளை விதித்தது.

புதிய தடைகளின்படி, பெட்ரோல் இறக்குமதிக்கும் துணிமணி ஏற்றுமதிக்கும் உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்