Images
  • UN

வன்செயல்களை முடிவுக்குக் கொண்டுவர மியன்மாரைக் கேட்கும் ஐ.நா

ரொஹிஞ்சாக்களுக்கு எதிரான வன்செயல்களை முடிவுக்குக் கொண்டு வரும்படி ஐக்கிய நாட்டு நிறுவனம் மியன்மாரைக் கேட்டுக்கொண்டுள்ளது. அங்கு நடக்கும் வன்செயல்களால் சுமார் 400 ஆயிரம் ரொஹிஞ்சாக்கள் பங்களாதேஷில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர்.

சிறுபான்மையினரைத் துடைத்தொழிக்கும் சூழ்நிலை ரக்கேன் நிலத்தில் நிலவுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குவெட்டாரெஸ் குறிப்பிட்டார். அங்கு நடக்கும் பேரழிவை வருணிக்க அதைவிட வேறு வார்த்தை இல்லை என்றும் அவர் கூறினார்.

வன்செயல்களுக்கு கண்டனம் தெரிவித்த ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றமும் அவற்றை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும்படி கேட்டுக்கொண்டது.15 உறுப்பினர்களைக் கொண்டு மன்றம் ஒன்பது ஆண்டில் மியன்மார் குறித்து முதல் முறையாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

மியன்மாரின் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சி வன்செயல்களை ஒடுக்க எதுவும் செய்யவில்லை என தொடர்ந்து குறைகூறப்பட்டு வருகிறார்.

உங்கள் கருத்து

Top