Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவுடன் கூட்டு உடன்படிக்கையில் ஏர் ஏஷியா

மலேசியாவின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஏர் ஏஷியா சீனாவுடன் இணைந்து கூட்டு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சீனாவுடன் கூட்டு உடன்படிக்கையில் ஏர் ஏஷியா

படம்: The Malaysian Insider

மலேசியாவின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஏர் ஏஷியா சீனாவுடன் இணைந்து கூட்டு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

செங்ச்சாவ் நகரில் தளம் அமைத்து குறைந்த விமானச் சேவையை வழங்குவது அதன் நோக்கம்.

சீன அதரவு பெற்ற நிதி நிறுவனமான எவர்ப்ரைட் (Everbright) குழுமமும், ஹீனான் மாநில அரசாங்கப் பணிக் குழுவும் அந்த முயற்சியில் இணைந்துள்ளன.

ஏர் ஏஷியா சீனா, விமானத் துறையின் கட்டமைப்பிலும் முதலீடு செய்யவுள்ளது.

செங்ச்சாவ் விமான நிலையத்தில் LCC முனையம், விமானிகள், விமான ஊழியர்கள், பொறியியலாளர்கள் போன்றோருக்கான பயிற்றுவிப்புக் கழகம், விமானங்களைப் பராமரிக்கும், பழுதுபார்க்கும் வளாகம் போன்றவை முதலீடுகளில் சில.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்