Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அமராவதி நகரின் மேம்பாட்டாளர்களாக சிங்கப்பூர் நிறுவனங்கள் நியமனம்

சிங்கப்பூரின் Ascendas-Singbridge நிறுவனமும் Sembcorp Development நிறுவனமும் அமராவதி நகரின் முக்கிய மேம்பாட்டாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் Ascendas-Singbridge நிறுவனமும் Sembcorp Development நிறுவனமும் அமராவதி நகரின் முக்கிய மேம்பாட்டாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலுள்ள ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் புதிய தலைநகர் அமராவதி.

நகர்ப்புறப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் அந்த இரண்டு நிறுவனங்களும், அமராவதி நகரை நிர்மாணிக்கும் பணியில், ஆந்திரப் பிரதேச மாநிலத்துடன் இணைந்து செயல்படும்.
அமராவதியில், சிங்கப்பூர் நிறுவனங்கள் செயல்படுத்தவிருக்கும் திட்டம் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு சுமார் 7 சதுர கிலோமீட்டர்.

அங்கு வர்த்தக, வியாபார, குடியிருப்புப் பகுதிகள் அமைந்திருக்கும்.

மேம்பாட்டுப் பணிகள் 15 முதல் 20 ஆண்டுகளில், கட்டங்கட்டமாக முடிக்கப்படும்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, தற்போதைய தலைநகர் ஹைதராபாத், தெலங்கானா மாநிலத்திற்குச் சென்றது.

அதனால் புதிதாக ஒரு தலைநகரைத் தொடக்கத்திலிருந்தே கட்டி எழுப்ப வேண்டிய கட்டாயம் ஆந்திரப் பிரதேசத்துக்கு.

அளவிலும், இருதரப்புப் பங்காளித்துவ சாத்தியமுள்ள வகையிலும், அமராவதி மிக முக்கியமான திட்டம் என்றார், வர்த்தக, தொழில் அமைச்சர் திரு. எஸ் ஈஸ்வரன்.

இந்தியாவின் விரிவான மேம்பாட்டு இலக்குகளில், சிங்கப்பூரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், இந்தியாவில் உருவாகும் புதிய திட்டங்களில் பங்கேற்க, சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு என்றார் அவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்