Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கடல்துறைப் பூசல்களை முறையாகக் கையாள சீனா வியட்நாம் உறுதி

சீனாவும், வியட்நாமும், தங்களுக்கிடையிலான கடல்துறைப் பூசல்களை முறையாகக் கையாண்டு, கட்டுக்குள் வைத்திருக்க உறுதி தெரிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -
கடல்துறைப் பூசல்களை முறையாகக் கையாள சீனா வியட்நாம் உறுதி

வியட் நாமிய மீன்பிடி கப்பலை தாக்கும் சீன கடற்படை கப்பல். (படம்: AFP)

சீனாவும், வியட்நாமும், தங்களுக்கிடையிலான கடல்துறைப் பூசல்களை முறையாகக் கையாண்டு, கட்டுக்குள் வைத்திருக்க உறுதி தெரிவித்துள்ளன.

தென் சீனக் கடல் வட்டாரத்தில் அமைதியை நிலைநாட்டும் வகையில் அவ்வாறு செய்யவிருப்பதாக இரு நாடுகளும் குறிப்பிட்டன.

சீன வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்ட கூட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு அதனைத் தெரிவித்தது.

சென்ற வாரம் இரு நாட்டுத் தலைவர்களும் தென் சீனக் கடல் விவகாரம் குறித்துக் கருத்துப் பரிமாறிக்கொண்டனர்.

இரு தலைவர்களும் தற்போதைய எல்லைப் பேச்சுகளைத் தொடர்ந்து, நீடித்த தீர்வுகாண இணக்கம் தெரிவித்ததாக இன்றைய அறிவிப்பு கூறியது.

ஃபிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடார்ட்டே, சீனாவுடனான மோதலில் இருந்து பின்வாங்கியதையடுத்து, தென் சீனக் கடலின் தொடர்பில், வியட்நாமுக்கும் சீனாவுக்குமிடையில்தான் சர்ச்சை வலுத்துள்ளதாகக் கருதப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்