Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சிரியாவில் மாண்ட ஐ.எஸ் தலைவரின் வேலையைத் தொடரும் 4 மலேசியர்கள்

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் மலேசியத் தலைவர் முகமது வேண்டி முகமது ஜேடியின் பொறுப்பை 4 மலேசியர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதை மலேசியக் காவல்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது. 

வாசிப்புநேரம் -
சிரியாவில் மாண்ட ஐ.எஸ் தலைவரின் வேலையைத் தொடரும் 4 மலேசியர்கள்

முகமது ரஃபியுடின் (மேலே), அக்பர் ஸைனால், முகமது ஃபுஸைல், முகமது ஸஹார் ஆகியோர் சிரியாவில் மாண்ட ஐ.எஸ் தலைவரின் வேலையைத் தொடர்வதாகக் கூறப்படுகிறது. (படம்: Malay Mail Online file photo)

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் மலேசியத் தலைவர் முகமது வேண்டி முகமது ஜேடியின் பொறுப்பை 4 மலேசியர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதை மலேசியக் காவல்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது. 

பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் வேலையைச் செய்த முகமது வேண்டி சிரியாவில் நடந்த ஆகாயத் தாக்குதலில் மாண்டதை மலேசியா அண்மையில் உறுதிப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து 4 மலேசியர்கள் அவரது வேலையைத் தொடர்வதாகப் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

முகமது ரஃபியுடின், அக்பர் ஸைனால், முகமது ஃபுஸைல், முகமது ஸஹார் ஆகியோர் அந்த நால்வர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்