Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பட்டுப் பாதை உச்சநிலைக் கூட்டம் - வடகொரியாவின் பங்கேற்பு குறித்து ஆச்சரியம்

வடகொரியாவின் ஏவுகணைச் சோதனையைத் தொடர்ந்து, சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் நடைபெறும் பட்டுப் பாதை உச்சநிலைக் கூட்டத்தில் வடகொரியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் இல்லை.

வாசிப்புநேரம் -
பட்டுப் பாதை உச்சநிலைக் கூட்டம் - வடகொரியாவின் பங்கேற்பு குறித்து ஆச்சரியம்

பாதை உச்சநிலைக் கூட்டத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங். (படம்: AP)

வடகொரியாவின் ஏவுகணைச் சோதனையைத் தொடர்ந்து, சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் நடைபெறும் பட்டுப் பாதை உச்சநிலைக் கூட்டத்தில் வடகொரியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் இல்லை.

இரண்டு நாள் கூட்டத்தில் வடகொரியாவைப் பிரதிநிதித்து அந்நாட்டின் வெளிநாட்டுப் பொருளியல் உறவுகளுக்கான அமைச்சர் திரு. கிம் யோங் ஜே கலந்துகொண்டுள்ளார்.

இந்த அனைத்துலகக் கூட்டத்தில் வடகொரியாவின் பங்கேற்பு இதர நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

குறிப்பாக தென்கொரியாவும் அமெரிக்காவும் அதை எதிர்பார்க்கவில்லை.

பியோங்யாங்கின் பங்கேற்பு இதர நாடுகளின் பிரதிநிதிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடுமென்று வாஷிங்டன் சீன அரசாங்கத்தை ஏற்கனவே எச்சரித்திருந்தது.

பட்டுப் பாதை உச்சநிலைக் கூட்டத்துக்கு வடகொரியாவை அழைப்பது, ஏனைய உலக வல்லரசுகளுக்குத் தவறான சமிக்ஞையை அனுப்புமென பெய்ச்சிங்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் சீன வெளியுறவு அமைச்சிடம் தெரிவித்திருந்தது.

பியோங்யாங்கின் அணுவாயுதச் சோதனைத் திட்டங்களை முறியடிக்க, உலக வல்லரசுகள் முயன்றுவருகின்றன.

அதில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை.

கூட்டத்தில் நேற்று எடுக்கப்பட்ட படங்கள் திரு. கிம், வெள்ளை மாளிகை ஆலோசகர் திரு. மட் பொட்டிங்கருடன் இருந்ததைக் காட்டின.

ஆனால், அவர்கள் இருவரும் பேசிக்கொண்டார்களா, அப்படிப் பேசியிருந்தால் என்ன பேசினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்