Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

உளவாளி என குற்றஞ்சாட்டப்பட்ட இந்தியர் - மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டுகோள்

பாகிஸ்தானால் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்தியக் குடிமகனின் தண்டனையை ரத்து செய்யும்படி இஸ்லாமாபாத்தை வற்புறுத்துமாறு அனைத்துலக நீதிமன்றத்திடம் இந்தியா முறையிடவுள்ளது.

வாசிப்புநேரம் -
உளவாளி என குற்றஞ்சாட்டப்பட்ட இந்தியர் - மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டுகோள்

(படம்: AFP)

பாகிஸ்தானால் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்தியக் குடிமகனின் தண்டனையை ரத்து செய்யும்படி இஸ்லாமாபாத்தை வற்புறுத்துமாறு அனைத்துலக நீதிமன்றத்திடம் இந்தியா முறையிடவுள்ளது.

குல்புஷன் சுதிர் யாதவ் என்னும் அந்த ஆடவர், சென்ற ஆண்டு பலூச்சிஸ்தான் வட்டாரத்தில் கைதானார்.

அவர் உளவாளி எனப் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுகிறது.

இந்திய உளவுப் பிரிவுக்காக உளவுபார்த்ததை அவரே ஒப்புக்கொண்டுள்ளதாகப் பாகிஸ்தானிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், இந்தியா அதை மறுத்து வருகிறது.

சென்ற வாரம் அதுகுறித்து இந்தியா, ஹேக் அனைத்துலக நீதிமன்றத்தில் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்தது 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்