Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ரொஹிஞ்சா மக்களுக்கு எதிரான வன்முறையை விசாரிப்பதாகக் கூறும் மியன்மாரின் இராணுவம்

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில், அந்நாட்டு இராணுவம் மேற்கொண்ட செயல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மியன்மாரின் இராணுவம் கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -
ரொஹிஞ்சா மக்களுக்கு எதிரான வன்முறையை விசாரிப்பதாகக் கூறும் மியன்மாரின் இராணுவம்

(படம்: AFP/Ye Aung Thu))

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில், அந்நாட்டு இராணுவம் மேற்கொண்ட செயல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மியன்மாரின் இராணுவம் கூறியுள்ளது. அந்த விசாரணை முடிவடைந்த பின்னர், அதுபற்றிய அறிக்கை வெளியிடப்படும் என்று அது கூறியது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையின் காரணமாக, அரை மில்லியனுக்கும் அதிகமான ரொஹிஞ்சா முஸ்லிம்கள் பங்கிளாதேஷிற்குள் அடைக்கலம் நாடிச் சென்றுள்ளனர்.

அவ்வாறு சென்ற பலரும், மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில், இராணுவத் துருப்புகள் கொலை, பாலியல் பலாத்காரம் முதலிய செயல்களில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்த்ததாகத் தெரிவித்தனர். அதனை அடுத்து, அந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க, மியன்மார் இராணுவம் ஆவண செய்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்