Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் வீட்டில் மத்திய புலனாய்வுப் பிரிவு சோதனை

இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவு, முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டிலும் அவரது மகனுடைய வீட்டிலும் அதிரடிச் சோதனை மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

வாசிப்புநேரம் -
இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் வீட்டில் மத்திய புலனாய்வுப் பிரிவு சோதனை

திரு. ப. சிதம்பரம். (படம்: AFP)

புதுடில்லி: இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவு, முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டிலும் அவரது மகனுடைய வீட்டிலும் அதிரடிச் சோதனை மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அவரது சொந்த ஊரான சென்னையில் குறைந்தது 14 இடங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

தனியார் நிறுவனத்தில் நிதி சார்ந்த குற்றச்சாட்டுகளின் சந்தேகத்தில் சோதனை நடத்தப்பட்டதாக புதுடில்லி தெரிவித்தது.

காங்கிரஸ் ஆட்சியின்போது நிதியமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த திரு. சிதம்பரம் 2014 வரை அந்தப் பதவியில் இருந்தார்.

சம்பவம் குறித்து உடனடியாகக் கருத்துக் கேட்க திரு. சிதம்பரத்தைத் தொடர்புகொள்ள முடியவில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்