Images
  • human sacrifice
    5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு எலும்புக்கூடுகள் (படங்கள்: AFP)

தென்கொரியா: நரபலி நடந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு

தென்கொரியாவில் பழங்காலத்தில் ஒரு விபரீதப் பழக்கம்.

கட்டடங்கள் உறுதியாக, வெற்றிகரமாகக் கட்டிமுடிக்கப்படுவதை உறுதிசெய்ய மனிதர்கள் பலியிடப்பட்டனர்.

புதைந்திருந்த உண்மை அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது... ஒரு கொரியக் கட்டடம் இருக்கும் இடத்தில்.

5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு எலும்புக்கூடுகள் வோல்சியோங்கிலுள்ள நிலாக் கோட்டையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


சோலின் கலாசார மரபுடைமை நிர்வாகம் அதுகுறித்த அறிக்கையை வெளியிட்டது.

அரசர்கள் இறந்த பிறகு, அவர்களுக்குப் பணிவிடை செய்துவந்த மனிதர்களை அரசர்களுடன் சேர்த்துப் புதைப்பது கொரியர்களின் ஒரு பழக்கமாக இருந்தது.

வோல்சியோங்கில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் எப்படிப் புதைக்கப்பட்டன எனும் தகவல் இன்னும் தெரியவில்லை.

புதைக்கப்பட்டவர்கள் எதிர்ப்புக் காட்டியதற்கான அறிகுறி ஏதும் இல்லை.

புதைக்கப்பட்டபோது அவர்கள் சுயநினைவின்றி இருந்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே இறந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மனிதர்களைப் பலிகொடுப்பதால், கடவுள் அமைதியடைகிறார். அதன் விளைவாகக் கட்டடங்கள் நீண்டகாலம் வலுவாக இருக்கும் என்பதைக் கொரிய மக்கள் ஒருகாலத்தில் நம்பியதாகப் பழங்காலக் கதைகள் கூறுகின்றன.  

உங்கள் கருத்து

Top