Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா-சிங்கப்பூர் ராணுவ உறவு மறுவுறுதி

இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான ராணுவ உறவு மறுவுறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான ராணுவ உறவு மறுவுறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு 5 நாள் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கடற்படைத் தலைவர் அட்மிரல் சுனில் லன்பா அதனை இன்று அறிவித்தார்.

சாங்கி கண்காட்சி நிலையத்தில், திரு சுனில், தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென்னைச் சந்தித்தார்.

அனைத்துலகக் கடல்துறைத் தற்காப்புக் கண்காட்சி, கடல்துறைப் பாதுகாப்பு மாநாடு ஆகியவற்றின் அதிகாரபூர்வத் திறப்புவிழாவிலும் அவர் கலந்துகொண்டார்.

சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்டகாலத் தற்காப்பு உறவு இருப்பதைத் தற்காப்பு அமைச்சு சுட்டியது.

கடந்த 10 ஆண்டுகளில் செய்துகொள்ளப்பட்டிருக்கும் பல்வேறு ஒப்பந்தங்கள் அதனை மேலும் வலுவாக்கியுள்ளதாய் அமைச்சு சொன்னது.

இருநாட்டு ஆயுதப் படைகளும் கூட்டுப் பயிற்சி, கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிபுணத்துவப் பரிமாற்றங்களின் மூலம் அவ்வப்போது தொடர்புகொண்டு வருகின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்