Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் ஐ.எஸ். பிரிவுடன் தொடர்புடைய 18 சந்தேக நபர்கள் கைது

மலேசியாவின் தேசிய தினக் கொண்டாட்டம் இம்மாதம் 31ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேளையில் பேராக் மாநிலக் காவல்துறையினர் அங்கு ஐ.எஸ். பிரிவு செயல்பட்டு வந்ததை வெளிப்படுத்தியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
மலேசியாவில் ஐ.எஸ். பிரிவுடன் தொடர்புடைய 18 சந்தேக நபர்கள் கைது

(படம்: MANAN VATSYAYANA/AFP)

மலேசியாவின் தேசிய தினக் கொண்டாட்டம் இம்மாதம் 31ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேளையில் பேராக் மாநிலக் காவல்துறையினர் அங்கு ஐ.எஸ். பிரிவு செயல்பட்டு வந்ததை வெளிப்படுத்தியுள்ளனர்.

அந்த மாநிலத்தில் கைதுசெய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து அந்தத் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர்.

பேராக் மாநிலத்தில் ஐ.எஸ். பிரிவுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 18 பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களில் 13 பேர் இன்னமும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வழிபாட்டு இடங்கள், வங்கிகள், சுற்றுப்பயணிகள் கூடும் பிரபலச் சுற்றுலாத் தள்ங்கள் முதலியவற்றில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்