Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஏர்ஏஷியா விமானம்

பெர்த்திலிருந்து பாலித் (Bali) தீவுக்கு சென்று கொண்டிருந்த ஏர்ஏஷியா விமானம், புறப்பட்ட சற்று நேரத்திலேயே திடீரென்று 20ஆயிரம் அடி கீழே இறங்கியது.

வாசிப்புநேரம் -
பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஏர்ஏஷியா விமானம்

(படம்: Screengrab from Channel Nine)

பெர்த்திலிருந்து பாலித் (Bali) தீவுக்கு சென்று கொண்டிருந்த ஏர்ஏஷியா விமானம், புறப்பட்ட சற்று நேரத்திலேயே திடீரென்று 20ஆயிரம் அடி கீழே இறங்கியது.

QZ 535 எண் கொண்ட அந்த விமானத்தில் 145 பயணிகள் இருந்தனர்.
பயணம் தொடங்கிய 25 நிமிடத்திலேயே அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

விமானம் கீழிறங்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் பயணிகள் பதறிப்போயினர்.

பீதி அடைந்த பயணிகள், அருகிலிருந்த தங்கள் அன்புக்குரியோரைக் இறுக்கமாகக் கட்டி அணைத்துக் கொண்டு, பிரார்த்தனை செய்ததாகக் கூறினர். மேலும் சிலர் அந்த மோசமான தருணத்தைப் பற்றி பகிர்ந்துக்கொண்டனர்.

விமான ஊழியர்களும் பதற்றமாகக் காணப்பட்டதால் நிலைமை இன்னும் மோசமானது என்று சிலர் கூறினர்.

ஏர்ஏஷியா நிறுவனம் நடந்ததை எண்ணி வருத்தம் தெரிவித்தது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது குறித்த தீவிர விசாரணைக்கு விமான நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கிறது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்