Images
  • 16may satellite (1)

உலகின் ஆகச் சிறிய துணைக்கோள் - இந்தியரின் கண்டுபிடிப்பு

உலகின் ஆகச் சிறிய துணைக்கோளை உருவாக்கியுள்ளார் இந்தியாவின் 18-வயது ரிஃபாத் ஷரூக். முப்பரிமாண அச்சுப்பொறியின் கரி நுண்ணிழையின் பணியை எடுத்துக்காட்ட துணைக்கோளை உருவாக்கியதாக அவர் கூறினார்.

64 கிராம் எடை கொண்ட அவரது துணைக்கோளை 4 மணி நேர விண்வெளிப் பணியில் ஈடுபடுத்த முடியும்.

அது மிகக்குறைவான புவிஈர்ப்புச் சக்தியைக் கொண்ட சூழலில் 12 நிமிடங்களுக்கு இயங்கும்.

கலாம்சாட்(KalamSat) என அழக்கப்படும் அது, இந்திய விண்வெளித் துறையின் முன்னோடியும் முன்னாள் அதிபருமான திரு அப்துல் கலாமின் நினைவாகப் பெயர்சூட்டப்பட்டது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ரிஃபாத்.

சென்னையைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஸ்பேஸ் கிட்ஸ்(Space Kidz) என்னும், இந்தியச் சிறுவர்கள், பதின்ம வயதினரிடையே அறிவியல், கல்வியை ஊக்குவிக்கும் அமைப்பில் முன்னணி விஞ்ஞானியாக வேலை செய்து வருகிறார்.

தனது பதினைந்தாவது வயதில் வெப்பவாயுவில் இயங்கும் வானிலை பலூனையும் அவர் உருவாக்கினார்.

இளம் விஞ்ஞானிகளுக்கென தேசிய அளவில் நடத்தப்பட்ட போட்டியின் ஓர் அங்கம் அது. 

உங்கள் கருத்து

Top