Images
  • 16May Thailand alert (1)

பேங்காக்கின் தேசிய அரங்கத்திற்கு வெளியே வெடிப்பு: விழிப்பு நிலையில் அதிகாரிகள்

தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள தேசிய அரங்கிற்கு வெளியில் ஏற்பட்ட சிறிய வெடிப்பைத் தொடர்ந்து அந்நாட்டு அதிகாரிகள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வெடிப்பில் இரண்டு பெண்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

அந்த வெடிப்பு உள்ளூர் நேரப்படி நேற்றிரவு எட்டரை மணிக்கு ஏற்பட்டது.

அரங்கிற்கு முன்னால் உள்ள குப்பைக் தொட்டியில் அந்த வெடிகுண்டு ஒளித்துவைக்கப்பட்டிருந்ததாக வெடிகுண்டுச் செயலிழப்பு நிபுணர்கள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் இப்போது இறங்கியுள்ளனர்.

இருப்பினும் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் குண்டு வெடிக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். 

உங்கள் கருத்து

Top