Images
  • 17may rats

மதுபோதையில் எலிகள். எங்கே?

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான லிட்டர் மதுவை எலிகள் அருந்தியுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் கூறியுள்ளனர்.

பீகாரில் மது விற்பனைக்கும் மது அருந்துவதற்கும் கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அங்கு 900,000 லிட்டருக்கும் மேற்பட்ட மது கைபற்றப்பட்டது.

அவற்றுள் பெரும்பாலான மதுவை எலிகள் குடித்ததாக வந்துள்ள புகாரை விசாரித்து வருவதாக பீகார் மாநில காவல் துறையினர் கூறியுள்ளனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து, பீகாரிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் அவ்வப்போது கைபற்றப்பட்ட மதுவின் அளவைக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.  

உங்கள் கருத்து

Top