Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவைக் குறைகூறி இந்தியாவைப் பாராட்டிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

சீனா, அனைத்துலக ரீதியான அமைதிக்குப் பாதகம் விளைவிப்பதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டிலர்சன்  குற்றஞ்சாட்டியிருக்கிறார். அதே வேளை, அவர், இந்தியவைப் பாராட்டிப் பேசினார்.

வாசிப்புநேரம் -

சீனா, அனைத்துலக ரீதியான அமைதிக்குப் பாதகம் விளைவிப்பதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். அதே வேளை, அவர், இந்தியாவைப் பாராட்டிப் பேசினார்.

அடுத்த வாரம் புதுடில்லிக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணத்தை முன்னிட்டு திரு டில்லர்சன்
 அவ்வாறு கருத்துரைத்தார். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பொதுவான சில பண்புகள் குறித்து அவர் பேசினார்.

அனைத்துலகச் சட்டத்துக்கும் வழக்கங்களுக்கும் ஏற்ற வகையிலான விதிமுறையின் அடிப்படையில் ஒழுங்கு முறையைப் பின்பற்றுவதும், ஜனநாயகமும் அவை என்றார் அவர்.

சீனாவை இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பேசிய திரு டில்லர்சன், சீனா பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்வதாகச் சொன்னார்.

தென் சீனக் கடல் பகுதியில், சீனா மேற்கொண்டுவரும் தூண்டுதல் நடவடிக்கைகள், அனைத்துலகச் சட்டங்களையும் வழக்கங்களையும் மீறுவதாகத் திரு டிலர்சன் குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்