Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஃபிலிப்பீன்ஸில் பொது இடங்களில் புகைக்கத் தடை

ஃபிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிக்கோ டுடார்ட்டே, நாடு முழுவதும், பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

மணிலா: ஃபிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிக்கோ டுடார்ட்டே, நாடு முழுவதும், பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நடைபாதைகள் உள்ளிட்ட அனைத்துப் பொது இடங்களிலும் மின் சிகரெட் உள்ளிட்ட எல்லாவிதமான புகையிலைப் பொருட்களையும் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. 

அதற்கான உத்தரவு நேற்றுக் கையெழுத்தானது.

18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் புகையிலைப் பொருட்களை வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது இடங்களில் புகைபிடிப்போரைத் தண்டிப்பதில், பொதுமக்களின் ஒத்துழைப்புக்கும் அதிபர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

தடையை மீறுவோருக்கு 4 மாதம் வரையிலான சிறைத் தண்டனையும், சுமார் 140 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம். 

2015 ஆம் ஆண்டு உலகச் சுகாதார நிறுவன அறிக்கையின் படி, பிலிப்பின்ஸ் மக்கள் தொகையில், கால்வாசிக்கும் அதிகமானோர் புகை பிடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில், 11 விழுக்காட்டுச் சிறாரும் அடங்குவர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்