Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீன நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீட்டில் கட்டுப்பாடு

சீனக் குடிமக்கள் வெளிநாட்டில் மிதமிஞ்சி முதலீடு செய்வதை பெய்ச்சிங் கட்டுப்படுத்தவிருக்கிறது. விளையாட்டு மன்றங்கள், சொத்துச் சந்தை, கேளிக்கைத் துறை ஆகியவை அவற்றுள் அடங்கும்.

வாசிப்புநேரம் -
சீன நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீட்டில் கட்டுப்பாடு

படம்: AFP

சீனக் குடிமக்கள் வெளிநாட்டில் மிதமிஞ்சி முதலீடு செய்வதை பெய்ச்சிங் கட்டுப்படுத்தவிருக்கிறது. விளையாட்டு மன்றங்கள், சொத்துச் சந்தை, கேளிக்கைத் துறை ஆகியவை அவற்றுள் அடங்கும்.

பாலியல் படத் துறை, அனுமதிக்கப்படாத இராணுவத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் வெளிநாடுகளில் முதலீடு செய்யத் தடை விதிக்கவுள்ளது சீனா. முந்தைய ஆண்டுகளில் சீன அரசாங்கம் உள்ளூர் முதலீட்டாளர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதை ஊக்குவித்தது.

ஆனால், கடந்த ஆண்டு வரம்புக்கு மீறி முதலீடு செய்து நிறுவனங்கள் கடனில் மூழ்கும் போக்கு அதிகரிக்கலாம் என்ற அச்சத்தால், முதலீட்டுக்குத் தடை விதிக்க சீனா திட்டமிடுகிறது.

சீனா, இரு தரப்பு உறவு கொண்டிருக்காத நாடுகளில், சீன நிறுவனங்கள் இனிமேல் முதலீடு செய்ய முடியாது. போர்ச் சூழல் நிலவும் நாடுகளிலும் அவை முதலீடு செய்ய இயலாது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்