Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மேம்பட்ட புவி இடங்காட்டி முறைக்கான செயற்கைத் துணைக் கோளைப் பாய்ச்சியது ஜப்பான்

புவி இடங்காட்டி முறையை மேம்படுத்த உதவும் செயற்கைத் துணைக் கோளைத் தாங்கிய H-2Aரக உந்துகணையை ஜப்பான் வெற்றிகரமாகப் பாய்ச்சியுள்ளது

வாசிப்புநேரம் -
மேம்பட்ட புவி இடங்காட்டி முறைக்கான செயற்கைத் துணைக் கோளைப் பாய்ச்சியது ஜப்பான்

படம்: Reuters

புவி இடங்காட்டி முறையை மேம்படுத்த உதவும் செயற்கைத் துணைக் கோளைத் தாங்கிய H-2Aரக உந்துகணையை ஜப்பான் வெற்றிகரமாகப் பாய்ச்சியுள்ளது. உயரமான கட்டடங்கள் உள்ள பெருநகரங்களில், புவியிடங் காட்டி முறைப் பயனீட்டாளர்களுக்குத் தெளிவான சமிக்ஞை கிடைப்பதை, புதிய துணைக்கோளம் உறுதி செய்யும்.

தானியக்க வாகனங்களுக்கும் அது மேம்பட்ட சமிக்ஞையை வழங்கும். தேசியப் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கும் புதிய துணைக்கோளப் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

புவியிடங்காட்டி முறையை மேம்படுத்த, ஜப்பான் வெற்றிகரமாகப் பாய்ச்சிய மூன்றாவது துணைக்கோள் இது. அடுத்த ஆண்டு, ஏப்ரல் மாதத்திற்குள், ஜப்பான் மேலும் துல்லியமான தகவல்களைத் திரட்ட நான்காவது துணைக்கோளைப் பாய்ச்சத் திட்டமிட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்